ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.