ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணையம்

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாதென தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்தாலும்கூட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அத்தோடு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.