ஏப்ரலிலேயே அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டேன் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“எந்த பிரச்சினையுமின்றி, குடியுரிமை துறப்பு செயல்முறைகள் நிறைவடைந்து விட்டன. அதில் எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.

எனது அமெரிக்க கடவுச்சீட்டு ரத்துச் செய்யப்பட்ட பின்னர், புதிய சிறிலங்கா கடவுச்சீட்டைப் பெற்றிருக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.