எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐஓசி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.