எம்ஜிஆர் போன்று வர நினைப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை-கடம்பூர் ராஜூ

அரசியல் பிரவேசம் செய்துள்ள நடிகர் ரஜினி காந்த், அவரது அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் அரசியல் வருகையால் அரசியல் கட்சிகள் கலக் கம் அடைந்துள்ளன.

ரஜினிகாந்தின் அரசியல் வருகை திராவிட இயக்கங்களின் 60 ஆண்டுகால அரசியலை மாற்றும் என ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியார்களிடம் கூறியதாவது:

வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கின்றனர். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தவிர பிறருக்கு இடமில்லை. எம்ஜிஆர் போன்று வர நினைப்பது, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும். சிஸ்டம் சரியில்லை எனக் கூறும் ரஜினிக்கு, என்ன சிஸ்டம் சரியில்லை என கூறத் தெரியவில்லை.

LEAVE A REPLY