“எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன, நாம் எதற்கும் தயார்” சம்பந்தன் அறிவிப்பு

எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. அதற்காக நாம் எவருடனும் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வுக்காக எமது கதவுகள் திறந்துள்ளன. அக்கதவினூடாக எமது மக்களுக்கு ஏற்புடையதான அரசியல் தீர்வொன்று வரவேண்டும் என்பதே நிலைப்பாடாகவுள்ளது.

எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

எங்கள் மக்கள் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும் அனைவரின் ஆதரவுடனும் ஒற்றுமையாக செயற்படவும் தயாராகவே உள்ளோம் என்றார்.