எமது அரசாங்கத்திலேயே பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன – விஜயகலா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் குறுகிய காலத்தில் மக்களுக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கல்வி அமைச்சாக இருக்கலாம், தேசிய வீடமைப்பு அதிகார சபையாக இருக்கலாம், அல்லது மீள்குடியேற்ற அமைச்சாக இருக்கலாம் அனைத்து அமைச்சுக்களிலுமே எமது ஆட்சியிலேயே குறுகிய காலத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன, மத பேதமின்றி எந்த பாகுபாடுமின்றி அபிவிருத்திகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே எமது எதிர்பார்ப்பும் மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றாக அமைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.