என் தந்தை மீண்டும் தலைவராக மாட்டார் – நாமல் தகவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்த கருத்தை நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன தேர்தலுக்கு பின்னர் விலகவுள்ளதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக வருவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவுள்ளது எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பொறுப்பை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஏற்கமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக விளங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.