என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்

சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பாக நடித்ததால் கீர்த்தி சுரேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் அதிகமாக செல்கின்றன. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அவரிடம் நடிப்பில் உங்களுக்கான இடம் எது? என்று கேட்டதற்கு ‘என்னைப் பொறுத்தவரைக்கும் நடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் போல. ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் ஒவ்வொருவித அனுபவம் கிடைக்கும். நமது இடம் எப்போது வரும் என்கிற ஆர்வம் இருக்கும். நான் இறங்கி ஏறிக்கொண்டு இருக்கிறேன்.

நயன்தாரா, திரிஷா இவர்கள் எல்லாம் முன்னணி கதாநாயகிகள். அவர்கள் வணிக ரீதியான படங்களில் நடித்துதான் மேலே வந்தார்கள். இப்போது தங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் முடிவு சரியானது. நான் அப்படி இல்லை. இப்போதுதான் வளர்ந்துகொண்டு இருக்கிறேன். என் இடத்தைத் தீர்மானிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. எனவே கிடைக்கும் வேடங்களில் நடிக்கிறேன்’’ என்று கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY