என்னை பாராட்டுவது எனக்குப் பிடிக்காது – இலியானா பேட்டி

1446044363-0169இந்திப்பட கனவில் தெலுங்கு, தமிழ்ப்பட மார்க்கெட்டை காற்றில் கரையவிட்டவர்களில் இலியானாவும் ஒருவர். இந்தியில் படங்கள் வருகிறதோ இல்லையோ கிசுகிசுக்கள் டன் கணக்கில் வருகின்றன. முக்கியமாக, அவர் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஆண்ட்ரூவை காலிப்பது பற்றி. கிசுகிசு குறித்து கேட்டால் கொதிநிலைக்குப் போகிறார் இலியானா. பேச்சில் ஆவி தளும்புகிறது.

உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எவை?

என்னை யாரும் பாராட்டுவது எனக்குப் பிடிக்காது. எனக்கு மற்றவர்கள் ஆலோசனை வழங்குவதையும் வெறுக்கிறேன்.

உங்கள் குணங்களை வேறு யாருக்காவது மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?

இதுவரை யாருக்காகவும் என்னுடைய கேரக்டரை நான் மாற்றிக் கொண்டதில்லை. நான் ஒரு பெண் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள். என் உடம்புக்குள் பல ஆண்களை வைத்த மாதிரி நான் ரொம்பவும் தைரியமான பெண்.

உங்களுக்குப் பிடிக்காத பிற விஷயங்கள்…?

குடிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவர்களின் பக்கத்தில்கூட இருக்க மாட்டேன்.

பாலிவுட் பார்ட்டிகளின் உலகம். ஒரு நடிகையாக பார்ட்டியை தவிர்க்க முடியாதே…?

பார்ட்டிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மற்றவர்கள் குடிக்க ஆரம்பித்ததும் அங்கிருந்து கிளம்பிவிடுவேன்.

ஏன் அப்படி…?

குடித்த பின் சினிமா நடிகைதானே என்று என்னிடம் சிலர் நெருங்கவும், எல்லை மீறி நடக்கவும் முயற்சி செய்தனர். அவர்களை நான் நெருங்கவே விடவில்லை, துரத்திவிட்டேன். அதிலிருந்து குடிப்பவர்கள் என்றாலே எனக்குப் பிடிக்காது.

உங்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றனவே?

என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என் சொந்த வாழ்க்கை பற்றி மற்றவர்கள் பேசுவது எனக்கு பிடிக்காது. நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு பிடிக்கிறதோ, அப்படி இருப்பேன். என்னைப்பற்றி தவறாக வதந்திகள் பரப்புவதை பார்த்து நான் கவலைப்படுவது இல்லை.

ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்களே?

நான் நடிகை என்பதற்காக 24 மணி நேரமும் கேமரா முன்னால் இருக்க முடியாது. ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே என் முழு வாழ்க்கையும் இல்லை. கேமராவை விட்டு வெளியே வந்ததும் நான் சாதாரண பெண்தான். அப்போது என்னைப்பற்றித்தான் சிந்திப்பேன்.

LEAVE A REPLY