“என்னை எப்படி குற்றவாளி என்று கூறமுடியும்?“ – ரவி கருணாநாயக்க கேள்வி!

மத்­திய வங்கி எனது அமைச்­சுக்­குக் கீழே காணப்­ப­ட­வில்லை. அப்­ப­டி­யி­ருக்­கை­யில் பிணை­முறி விற்­பனை விவ­கா­ரத்­தில் என்னை எப்­படி குற்­ற­வாளி என்று கூற­மு­டி­யும் என்று முன்­னாள் நிதி அமைச்­ச­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை முன்­னெ­டுத்த அரச தலை­வர் ஆணைக்­குழு தனது அறிக்­கை­யில், ரவி கரு­ணா­நா­யக்க மீது இலஞ்­சக் குற்­றச்­சாட்டு சுமத்­தி­யி­ருந்­தது. ஆணைக்­குழு முன் பொய்ச் சாட்­சி­யம் வழங்­கி­ய­தற்­காக குற்­ற­வி­யல் வழக்கு தாக்­கல் செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் கூறி­யி­ருந்­தது.

இது தொடர்­பில் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­த­தா­வது: நான் நிதி அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­தி­ருந்­தேன். எனது நிர்­வா­கக் கட்­ட­மைப்­பிற்­குள் இலங்கை மத்­திய வங்­கியே அரச வங்­கி­களோ இல்லை. அப்­ப­டி­யி­ருக்­கை­யில் நான் எவ்­வாறு பிணை­மு­றி­கள் விற்­பனை விட­யத்­தில் குற்­ற­வா­ளி­யாக அடை­யா­ளம் காணப்­பட்­டேன் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­யா­துள்­ளது. ஆணைக்­கு­ழு­வின் அறிக்கை எனக்­குக் கிடைத்­த­தும் அதற்­கு­ரிய பதிலை வழங்­கு­தற்­குத் தயா­ரா­க­வுள்­ளேன்.

25ஆண்­டு­க­ளாக நான் அர­சி­ய­லில் இருக்­கின்­றேன். எனது மரி­யா­தை­யைக் கெடுப்­ப­தற்கு பலர் முயற்­சித்­தார்­கள். ஆனால் அனைத்­துத் தடை­க­ளி­லும் வெற்றி பெற்­றேன். என் மீதான நம்­ப­கத் தன்­மை­யைக் கெடுப்­ப­தற்கு நான் இடம்­கொ­டுக்க மாட்­டேன் – என்­றார்.

LEAVE A REPLY