எனது அரசியல் பயணம் பணம் சம்பாதிப்பதற்கானதல்ல: ஹர்ஷ

எனது இந்த அரசியல் பயணம் வெறுமனே நாடாளுமன்றத்தில் அமர்ந்து, பணம் சம்பாதித்து செல்வதற்கானதல்ல என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் இந்த அரசியல் களத்திற்கு வந்தது ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்து, பணம் சம்பாதித்து செல்வதற்கு அல்ல.

நமது நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, தற்போதுள்ள இடத்திலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே நாம் ஆட்சி ஏற்றுள்ளோம்.

இதனை செய்யாவிடின் எனது அரசியல் வாழ்க்கையினால் எவ்வித பயனும் இல்லை. எனவே, நாம் வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும். தைரியமாக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

நாம் வித்தியாசமாக சிந்திக்காவிடின், ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்படும். தற்போது நாம் பாரிய மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இதனை யாராலும் மறுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.