எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் பா.ஜ.க எம்.பி.யின் சர்ச்சை கருத்து

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா பகுதியில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம்மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நேபால் சிங் “பொதுவாக ஒரு சின்ன கிராமத்தில் சண்டை நடந்தாலே பலர் காயமடைகிறார்கள். அப்படியிருக்கும்போது எல்லையில் பணி அமர்த்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது சகஜம்தான்.

எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் சொல்லுங்கள்? தினமும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அதை மாற்ற முடியாது. குண்டுகளை செயலிழக்க செய்யும் முறை ஏதேனும் இருக்கிறதா என்ன? அப்படியிருந்தால் சொல்லுங்கள் அந்த முறையை நடைமுறைபடுத்தி ராணுவ வீரர்களை காப்பாற்றலாம். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துடன் மத்திய அரசு துணைநிற்கும்” என்றுபேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY