எந்தவொரு அரச நிறுவனமும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது

எந்தவொரு அரச நிறுவனமும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது எந்தவொரு அரச நிறுவனமோ அல்லது மாகாண அரச நிறுவனமோ வெளிநாடுகளுடன் எந்தவொரு உடன்படிக்கையையோ, புரிந்துணர்வு உடன் படிக்கையையோ மேற்கொள்ள முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே வர்தன தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனாக சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தற்பொழுது உள்ள விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படுவதற்கு இதன் மூலம் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஒழுக்கத்தை எற்படுத்த அரச நிர்வாகம் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வதேச புரிந்துணர்வு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்து தெரிவிக்கையில் அரச துறையில் ஊழலை ஒழித்து செயற்திறன் மிக்க சேவையாக தரமுயர்த்துவதற்காக புதியதொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் அரச துறையை டியிற்றல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.

இதற்கு தேவையான அடிப்படைத் திட்டங்கள் கலந்துறையாடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித அபிவிருத்தி நிதியத்தின் (UNDP) தொழிநுட்ப ஒத்துளைப்புக்கு விருப்பம் தெரிவித்திருப்தாகவும இராஜாங்க அமைச்சர் சுசில் பிரே ஜயந்த மேலும் தெரிவித்தார்.