எதிர்வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி குறித்து அரசாங்கம் விளக்கம்

எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதோடு, இந்த செய்தி தவறானது எனவும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.