எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போதில்லை – கூட்டமைப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், படையினர், பொலிசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த விசேட கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மாத்திரமே தாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.