எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாசவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் பதவி மற்றும் வேட்புமனு சபையின் தலைவர் பதவி என்பன வழங்கப்பட்டுள்ளன.

தனக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்தும் காலம் தாமதித்தோ அல்லது, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருந்தாலும் அனைத்தும் கொடுக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

ஐக்கிய தேசிய கட்சியில் தனக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களும், தன்னுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர மாற்று வழிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டணியின் பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. ஆகவே இவையனைத்தையும் செயற்படுத்தி காட்டுங்கள் என்றும் சவால் விடுத்தார்கள். அதனை தற்போது நிறைவேற்றியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

விடுக்கப்பட்ட சவாலை வெற்றி கொண்டுள்ளளேன் ஆகவே அவர்களுக்கு இதில் இணைந்து பயணிப்பதை தவிர வேறு வழியில்லை. அதேநேரம், தாம் திட்டங்களை நடைமுறைப்படுத்தி செல்லும் போது, அதில் ஏதேனும் தடை ஏற்படுத்த முயல்வதானது தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 56 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையை வீண் செய்வது போலாகும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.