எதிர்க்கட்சித் தலைவரின் நோக்கம் தான் என்ன?

sampanthan TNA

எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதன் முதலாக வருகை தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்றிருந்தார். அவர் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு  உரையாற்றியிருந்தார்.

பின்னர் வலி. வடக்குப் பகுதிக்குச் சென்றதுடன் முக்கிய ஆலயங்களையும் தரிசித்து விட்டுச் சென்றிருந்தார். இறுதியாக உதயன் பத்திரிகைக்கு நேர் காணல் ஒன்றையும் நடத்தியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்னுமொரு கருத்தையும் கூறியிருந்தார். வன்முறையின் காரணமாகவே தமிழினத்துக்குப் பெரும் அழிவு ஏற் பட்டது. நாங்கள் ஏன் வன்முறை யைப் பின்பற்றினோம் என்ற பெரும் கேள்வி இன்று வரைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. வன் முறையைக் கையாண்டதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம்.  அதில் சில வற்றை  நியாயப்படுத்து வதாகவும் இருக்கலாம். ஆனாலும் வன் முறையை நாம் ஏன் தேர்ந் தெடுத்தோம் என்ற கேள்வி இன்ன மும் உள்ளது.

அவரது கருத்து விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை மறைமுகமாகக் குற்றம் சாட்டுவதாகவே இருக்கின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றது.

தமிழினத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக தமிழரசுக்கட்சி அகிம்சை வழியில் போராடியிருந் தது. அந்தப் போராட்டங்களி னால் தமிழினத்தின் விடுதலையை அடைய முடியவில்லை என்பது சிங்கள தேசத்திடம் நன்கு கற்றறிந்து கொண்ட பாடமாகும். சிங்கள அரசுகள் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வழங் குவதற்கு எந்தவொரு கால கட்டத் திலும் முன்வரவில்லை என்பது உண்மை.

1972 ஆம் ஆண்டு மே மாதம் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய முக் கூட்டு முன்னணி அரசானது புதிய அரசிய லமைப்பை உருவாக்கி தமிழினத் தின் உரிமைகளைப் பறித்தது.

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ் மாணவர்களின் மீதான உயர் கல்வியில் திட்டமிட்ட தரப்படுத் தலைக் கொண்டு வந்து அவர்களின் பல்கலைக்கழக நுழைவைக் கட்டுப்படுத்தியது. இப்படிப்பட்ட பிரச்சினைகளே தமிழர்களின் பிரச்சினைகள் மோசமடையக் காரணமாகின. அந்தக் காலகட்டத்தில் இரா.சம் பந்தன் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்ட ணியில் அங்கம் வகித்திருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.

1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதி தமிழ் மக்களிடம் ஆணை கோரப்பட்டது. அதனைத் தமிழ் மக் கள் வழங்கியிருந்தனர். அகிம்சை வழியில் தமிழீழக் கொள்கைக்கான போராட்டத்தை இலகுவில் வென்று விட முடியாது என்பது அப்போதைய தமிழ்த்தரப்பினருக்குத் தெரிந்த விடயமாகும். தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினால் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வழிகோலியது.

தமிழர்களின் ஒற்றுமையையும் தமி ழர் விடுதலைக்கூட்டணியின் பலத்தையும் உடைப்பதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசு பல சதித்திட் டங்களைத் தீட்டியிருந்தது. அவை முடியாமல் போனது. அகிம்சை வழி மூலப் போராட்டங்கள் யாவும் ஜே.ஆர். அரசால் ஒடுக்கப்பட்டன. தமிழினம் அழிக்கப்படுகின்ற நிலை மையில் தமிழ் இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை மீது நம்பிக்கையிழக்கத் தொடங்கினர்.

1979 ஆம் ஆண்டு மே மாதத் துக்குள் தமிழீழம் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் முழக்கமிட்டிருந்தார். ஜே.ஆர். அரசு கொடுத்திருந்த பச்சை ஜீப் வண்டிகளைக் கண்டு மயங்கி விட்ட இவர்களால் எப்படித் தமிழீழம் கிடைக்கும் என விரக்தியடைந்த தமிழ் இளைஞர்கள் மறை முகமாக விடுதலையை வென்றெடுக்கப் போராட வேண்டிய கட்டாய  நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிங்கள அரசானது எக்காலத்திலும் தமிழினத்துக்கான எந்தவொரு தீர்வையும் தராது. எம் இனத்தை அழிப்பதுவும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதுமே அவர் களின் குறிக்கோளாக இருந்தது.  இது தமிழ் இளைஞர்களால் தெளி வாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

சிறிமாவோவின் அரசின் காலத்தில் தமிழ் இளைஞர்கள் சிங்கள அரசுப் படையினரால் வேட்டையாடப்பட்டனர். 42 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்றைய தமிழரசுக் கட்சித் தலைவரான  மாவை சேனா திராசாவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவராவார். தமிழ் இளைஞர்கள் போர்க்குணம் கொண்டவர்களாக மாறினர். 1975ஆம் ஆண்டு வரையில் சிங்கள அரசுப் படைகள் மீது மறைமுகத் தாக்குதலை மேற்கொண்ட உரும்பிராய் தியாகி சிவ குமாரன் படையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கை யின் அடிப்படையில் தன்னைத் தானே தற்கொலை செய்த முதற்போராளியானார்.

வன்முறைகளைச் சிங்கள அரசுகள் தமிழ் மக்கள்மீது பிரயோகித்ததேயன்றி தமிழ் மக்கள் தமது விடு தலைப் போராட்டத்துக்கு வன்முறையைத் தேடிப் போகவேயில்லை.

இளைஞர்கள் ஆயுதம் தூக்கிப் போராடுவதற்கு  அப்போதைய தமிழ்த் தலைமையும் முக்கிய காரணமாகும். தமிழ்த் தலைமை தமிழீழக் கொள்கைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் போராட முடியாத நிலைக்கு வர அந்தப் போராட்டத்தை ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் பொறுப்பேற்றுக் கொண்டன. 1987 இலிருந்து ஒரேயயாரு விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பே அந்தப் போராட்டத்தை இறுதி வரை முன்னெடுத்திருந்தது. இந்த வரலாறுகளைச் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி யேற்ற பின்னர் மறந்து விட்டாரா? சம்பந்தன் தெரிவித்த இந்தக் கருத்தினால் யாழ்ப்பாண மக்கள் எதிர்க் கட்சித் தலைவர் ஏன் இப்படிக் கூற வேண்டிய தேவையேற்பட்டது எனக் குழம்பியுள்ளனர். தேசிய அரசுக்கு மறைமுக மான ஆதரவை   வழங்கிக் கொண்டு தமிழ்மக்களைக் குழப்பு கின்ற கருத்துக்களை வெளியிடு வது ஆரோக்கியமான விடயமாக இருக்காது.

30 வருட கால ஆயுதப் போராட்டத்தினால் விடுதலைக்காக அர்ப்பணித்துப் போராடிய பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் உயிர்த்தியாகங்களை சிறுமைப்படுத்துவதற்கான எண்ணம் கொண்டு இந்தக் கருத்தை எதற்காக யாழ்ப் பாணத்தில் வைத்து தெரிவித்தார் என்பதே தமிழர்களிடையே உள்ள கேள்வியாக இருக்கின்றது. யாழ்ப் பாணத்தில் மூன்று நாள் வரையில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலை வர் பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்காக தமிழர்களுக்கான தற்போதைய பிரச்சினைகளையும் ஜெனிவாவில் இடம் பெற்ற போர்க்குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக விளக்கங்கள் கொடுத்திருக்கலாம். அதிலிருந்து தவறியது ஏன் என்ற கேள்வியும் எழாமலில்லை.

யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் பல பிரதிநிதிகளையும் தமிழரசுக்கட்சியினர் அழைத்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தவறிவிட்டனர். இது இடம்பெற்றிருந்தால் சிவில் சமூகம் பல பிரச்சினைகளைக் கூறுகின்ற வாய்ப்பு கிட்டியிருக்கும்.

வடபகுதித் தமிழ் மக்களால் இன் றும் மிகப் பெரியதொரு விடயமாகவே கருதப்படுவது வடக்கு மாகாண முதலமைச்சரான க.வி. விக்னேஸ்வரனை இரா.சம்பந்தன் சந்திக்காமல் சென்றது ஏன்…..? என்பதுதான். முதலமைச்சரான விக்னேஸ்வரன் சுமார் ஒரு லட் சத்துக்கு அதிகமான விருப்பு வாக்குகளால் தேர்தலில் வெற்றிபெற்றவராவார். தமிழ் மக்களுக்கு அவரிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உ ண்டு.

மூத்த அரசியல்வாதி, தமிழினத்தை இன்றைய நிலையில் வழிநடத்திச் செல்பவர், சாணக்கியவாதி என சிலாகிக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் முதலமைச்சரை சந்திக்காமல் விட்டது என்பது நாகரிகமான விடயமல்ல.

வடக்கு முதல்வருடன் விரைவில் பேசுவோம் என்றும் சம்பந்தன் கூறியிருந்தாலும் மரியாதையின் நிமித்த மாவது முதலமைச்சரைச் சந்தித் திருக்கலாமல்லவா…… ரணிலுக் கும்….. சம்பந்தருக்கும் உள்ள வேறுபாடு யாது? தமிழ் மக்களின் பல கேள் விகளுக்குள்ளாகிய நிலையில் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளமை சங்தேகங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY