எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு

ஜனாதிபதியால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.