எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்க மறுத்தன. இந்நிலையில், விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், மக்களவையை மதியம் 12 மணி வரையும் மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்தி வைத்து சபாநாயகர்கள் உத்தரவிட்டனர். பின்னர் மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி நீடித்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து ஆறாவது நாளாக மக்களவை நடவடிக்கை முடங்கியுள்ளது.

LEAVE A REPLY