எதிர்கட்சியின் நடவடிக்கை மீதுள்ள கவனம் தீவிரவாதிகள் மீது இல்லை

வெடிபொருள் உற்பத்தி நிலையத்தின் ஊழியர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத காரணத்தினாலேயே பிணை வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று தீவிரவாத சந்தேகநபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.