எடப்பாடி பழனிசாமியை சிரிக்க வைத்தால் ரூ.10 ஆயிரம்

தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமியை யாராவது சிரிக்க வைத்தால் அவர்களுக்கு பரிசு தரப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஓ. பி. எஸ் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெ. வின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியே வர வேண்டும்.

அதற்காகத்தான் நீதி விசாரணை கேட்கிறோம். எடப்படி பழனிச்சாமியும், மு. க. ஸ்டாலினும் ரகசிய கூட்டணி அமைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆட்சியும், கட்சியிம் சசிகலா குடும்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் கூறுவதில்லை. சட்டசபையிலும் சரி, வெளியிலும் சரி முதல்வர் அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை.

எனவே, அவரை யாரேனும் சிரிக்க வைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசு தருகிறேன்” என கிண்டலாக தெரிவித்தார்.

LEAVE A REPLY