எடப்பாடி பழனிசாமியுடன் சரத்குமார் சந்திப்பு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளின் குடும்பத்தினரையும், போராட்டத்தில் கலந்துகொண்டு, துப்பாக்கி சூட்டிலும், தடியடியிலும் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்களையும் கடந்த 31-5-2018 அன்று அவர்களது இல்லங்களிலும், பொது மருத்துவமனையிலும் சந்தித்து, அந்த சந்திப்பின்போது நான் நேரடியாக கேட்டறிந்த பல்வேறு செய்திகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தேன்.

தொடர்ந்து மக்களின் மீது வழக்குகள் தொடரப்பட்டு நடவடிக்கை எடுப்பதும், இந்த வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தையும் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற ஐயம் பரவலாக நிலவுகிறது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு நிம்மதி வழங்க வேண்டும்.

இந்த பயம் கலந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு, எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்து மனஅழுத்தம் குறைந்து மக்கள் சகஜநிலை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் திறக்க வாய்ப்பளிக்காமல் இருக்கும் உத்தரவாதத்தை அனைவரும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY