எகிப்தில் கடும் பனி மூட்டம் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 22 பேர் சாவு

201602020040302219_Heavy-fog-in-Egypt-22-killed-in-crash_SECVPF.gifஎகிப்தின் தலைநகர் கெய்ரோவில் கடந்த சில நாட்களாக மேசமான வானிலை நிலவி வருகிறது. சாலைகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

நேற்று முன்தினம் கெய்ரோவுக்கு அருகே உள்ள பெனிசூயிப் நெடுஞ்சாலையில் அதிகாலையில் பல கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. 12 வாகனங்கள் சிக்கிய இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதிக பனி மூட்டமே விபத்துக்கு காரணம் என போலீசார் கூறினர்.

அதே போல் தெற்கு கெய்ரோ பகுதியில் மீன்பிடி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது டிரைவரின் பார்வையில் படவில்லை. லாரி ரெயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு சென்றபோது தண்டவாளத்தில் சிக்கி கொண்டது.

அப்போது அங்கு வந்த ரெயில் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

LEAVE A REPLY