ஊழல் குற்றச்சாட்டு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் இளைய சகோதரர் கைது!

FILE PHOTO: Shehbaz Sharif, brother of ex-prime minister Nawaz Sharif, and leader of Pakistan Muslim League – Nawaz (PML-N) leaves after attending the oath taking ceremony of the newly elected members of the National Assembly (Lower House of Parliament) at the Parliament house in Islamabad, Pakistan August 13, 2018. REUTERS/Faisal Mahmood
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் இளைய சகோதரரும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொறுப்புடைமை துறை அதிகாரிகளால் லாகூரில் வைத்து இவர் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே, நவாஸ் ஷரீப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பின்னர் பதவியை இழந்து சமீபத்தில் அவரது தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரத்தின் அடிப்படையில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலையிடாது என இம்ரான் கான் அரசில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் பாவத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.