உள்நாட்டிற்கு வருபவர்களுக்கு நாளை வரை அவகாசம்

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாளை (18) நள்ளிரவு முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமாக நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் விமானங்கள், Cargo மற்றும் Transit ஆகிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.