உலக கோப்பை ரக்பி தொடர் : காலிறுதியில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆர்ஜெண்டீனா!

493205022ஆர்ஜெண்டீனா – அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டீனா அணி 43-20 எனும் புள்ளிக் கணக்கில் வெற்றியை தனதாக்கி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதி நேரம் வரை போது 20-10 எனும் நிலையில் முன்னிலை வகித்தது ஆர்ஜெண்டீனா. எனினும் அடுத்த அரையிறுதி நேரத்தில் மிக வேகமாக முன்னேறிய அயர்லாந்து அணி 20 புள்ளிகள் வரை தொட்டது.

எனினும் ஆர்ஜெண்டீனா அணி மீண்டும் இரு ட்ரைகளை வெற்றிகரமாக முடித்து 43 புள்ளிகளை தொட்டது. இதன் மூலம் இப்போட்டியில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இதேவேளை ஆஸ்திரேலியா – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு காலிறுதிப் போட்டி இன்று நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்காட்லாந்து தோல்வி அடையுமாயின், முதன் முறையாக உலக கோப்பை ரக்பி தொடர் ஒன்றின் அரையிறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய ரக்பி அணி ஒன்று தெரிவாகாமல் போகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY