உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போன் – அசத்தல் வீடியோ

cfde729b-77d1-412c-91e3-4a409a7fdb5f_S_secvpf.gifற்போது பயன்பாட்டில் உள்ள பல ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் வகையில் உள்ளது. அப்படியே கெட்டுபோன ஒரு போனை சரிசெய்வதனாலும் அதற்கு ஆகும் செலவிற்கு ஒரு புது போனே வாங்கிவிடலாம்.

இந்நிலையில் பேர்போன் என்ற நிறுவனம் மிக எளிதாக பிரித்து, மீண்டும் பிரித்தெடுக்கப்பட்ட பாகங்களை சேர்க்கும் வகையில் வலுவான போனை அறிமுகப்படுத்த உள்ளது. பேர்போன்-2 என்ற பெயரில் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. இந்த போனின் எந்த பாகத்தையும் எளிதாக கழற்றி மாற்றிக்கொள்ள முடியும். பாதிப்படைந்த குறிப்பிட்ட பாகத்தை மாற்றிக்கொள்வது மூலம் போனை தூக்கியெறிய வேண்டிய நிலை ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் மட்டும் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை வழங்கப்படும் என்றும், போனின் விலை 38 ஆயிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் செயல்படும் விதத்தை விளக்கி இந்த அசத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளது பேர்போன் நிறுவனம்.

LEAVE A REPLY