உயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி

விமானப் படையின் கிபீர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளில் காலை 7.05 மணி அளவில் செஞ்சோலை வளாகத்தில் நடாத்திய குண்டு தாக்குதலில் அங்கு இருந்த பாடசாலை மாணவர்கள் பணியாளர்கள் உட்பட பலர் அந்த இடத்திலேயே பலியாகினார்கள்.

அந்த வகையிலே உயிரிழந்த உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் இடம்பெற்ற காலை 7.05 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வானது, தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உடைய உறுப்பினர் சி. குகனேசனின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது பிள்ளைகளை உறவுகளை பறிகொடுத்தவர்கள் பொதுமக்கள் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.