உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்தார்!

மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இராணுவ வீரர்களின் வசிப்பிடமான பொலனறுவைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினரின் வீட்டிற்குச் சென்று உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி, இராணுவத்தினரின் அளப்பரிய சேவைக்காக தான் தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஆபிரிக்க நாடான மாலியில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவத்தினர் இருவர் உயிரிழந்திருந்ததுடன் அறுவர் காயமடைந்திருந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்கள், ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இராணுவ வீரர்களின் உயிரிழப்பால், இராணுவ வீரர்களின் வசிப்பிடமான பொலனறுவை பெரும் சோகமயமாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.