உயர் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமித்தார் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹவினால் இன்று(புதன்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை செய்தல், உயர் பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உள்ளிட்ட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதியுயர் சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பீ.டபிள்யூ.டி.சி.ஜயதிலக்க செயற்பட்டிருந்தார்.

பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.