உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது

48403eb2-d396-4e51-9caf-19b57f5087d4_S_secvpf.gifஉத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ரிஷிகேஷ் பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில பார்வையாளர் ஸ்ரீசந்த் வோரா இத்தகவலை தெரிவித்தார்.

தேர்தல் பணிகளுக்காக 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் 15 ஆயிரம் தொண்டர்களை தயார்படுத்தியிருப்பதாகவும், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

LEAVE A REPLY