உதயநிதிக்கு நாயகியாக தமன்னா ஒப்பந்தம்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். ஜனவரியில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கவுள்ள படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயத்தை முதன்மையாக வைத்து இதன் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் சீனு ராமசாமி.

ஜனவரி 19-ம் தேதி முதல் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். யுவன் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராக வைரமுத்துவும் பணிபுரியவுள்ளார்கள். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

LEAVE A REPLY