உச்சக்கட்ட பீதியில் கொழும்பு; மைத்திரியின் அந்த அதிரடி அறிவிப்பு

கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் மிக முக்கியமான அறிவிப்பு அல்லது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார் என்பதுதொடர்பில் ஒருவித அரசியல் பீதி நிலவிவரும் நிலையில் பலரும் பலபட்ட விடயங்களினை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக மத்தியவங்கியின் பிணை முறி மோசடிக் குற்றத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி மீண்டும் பிரதமர் பதவியில் மாற்றம் செய்வதற்கான அதிரடிச் செயற்பாட்டில் அவர் ஈடுபடலாம் என ஒருசாரார் நம்புகின்றனர்.

ஆனாலும் இன்னொருசாராரின் கருத்துப்படி தற்போது நாட்டில் பேசுபொருளாகியுள்ள போதைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முடிவில் முதற்கட்ட அறிவிப்பினை அவர் வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் சம்பவமும் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முந்திக்கொள்வதற்காக இந்த அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அண்மையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் எனப்படும் பாதாளக் கும்பலுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படுவோரின் பெயர் பட்டியலில் அரசியல்வாதிகள் பலரின் பெயரும் உள்ளடங்குவதால் அந்த பட்டியலினை ஜனாதிபதி நாளை வெளியிடலம் எனவும் அரசியல் மட்ட பீதி கிழம்பியுள்ளது.

எது எவ்வாறாயினும் நாளைய தினம் அல்லது அதற்கு அடுத்துவரும் தினங்கள் கொழும்பு அரசியலில் பலத்த அதிர்வு உணரப்படும் என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.