உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைக்குவிப்பால் போர் மூளும் அபாயம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படை பலத்தை அதிகரித்துள்ளது இந்நிலையில் தொடர்ந்தாள் இங்கு போர் மூளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோசெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா வழக்கமாக நிறுத்தியிருக்கும் பீரங்கிகளைவிட மும்மடங்கு அதிகமாக இப்போது நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கிரிமிய கடற்கரைக்கு வந்த உக்ரைனின் 3போர்க்கப்பல்களை 24மாலுமிகளுடன் ரஷ்யப் படை சிறைபிடித்துள்ளது. இந்த மாலுமிகளை விடுவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசெங்கோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைன் ரஷ்யாவுடனான எல்லைப் பகுதியில் முப்பது நாட்களுக்கு இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது பொறுப்பற்ற செயல் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.