ஈ.பி.டி.பி. சார்பாக களமிறங்குகின்றார் ராஜா குகனேஸ்வரன்

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான அறிமுக நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது வன்னிதேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தியிருந்தார்.

அந்தவகையில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மூலம் கடந்த 1994 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜா குகனேஸ்வரன் ஈ.பி.டி.பி.யில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன், வவுனியா நகர பொது சுகாதார பரிசோதகராக நகரசபையில் கடமையாற்றிய சி. கிரிதரன் ஆகியோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.