ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாடு ஆரம்பம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இடம்பெற்று வருகின்றது.

இந்த மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட.மாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கடந்த 40 வருடமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கடந்து வந்த பாதை தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள், மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், கட்சியின் பொருளாளரும் மன்னார் நகர சபையின் உறுப்பினருமான சம்பூரணம் இரட்ணசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.