ஈரான் – அமெரிக்கா போர்ப் பதற்றம் : அமெரிக்காவின் முக்கியஸ்தர் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவு செய்து கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.