ஈரான்: அணு சக்தி ஒப்பந்தத்தை மீறுவோருக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ரூஹானி

கடந்த மே மாதம் தொடர்ச்சியாக இரண்டாம் முறை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ரூஹானி முறையாக சனியன்று பதவியேற்றார். முதல் முறையாக அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசுகையில் ரூஹானி, “இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய விரும்புவர்களின் அரசியல் வாழ்க்கையே கிழித்தெறியப்படும்” என்றார் ரூஹானி.

ரூஹானி மறைமுகமாக குறிப்பிட்டது அமெரிக்க அதிபர் டிரம்பையே என்பது தெளிவானது. கடந்த புதனன்று டிரம்ப் ஈரான் மீது நீண்ட தூர ஏவுகணை திட்டத்தில் பங்கு பெறும் நிறுவனங்கள் மீது தடைகளை கொண்டு வரும் சட்டத்தில் கையெழுத்திட்டார். டிரம்பின் சட்டம் ஈரானின் கௌரவமிக்க புரட்சிகர பாதுகாப்புப் படையினை தீவிரவாத தடைகள் பட்டியலிலும் சேர்க்கிறது. அதனுடன் வர்த்தகம் செய்வோருக்கு இத்தடைகள் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

“நாம் போரைவிட அமைதியையும், இறுக்கமான சூழலைவிட சீர்திருத்தங்களையுமே விரும்புகிறோம்” என்றார் அதிபர். தனது இரண்டாம் பதவி காலத்தில் முன்பு எப்போதையும் விட பயனுள்ள வகையில் உலகத்துடன் பயணிக்க விரும்புவதாகவும் அதிபர் கூறினார்.

LEAVE A REPLY