ஈரானில் துருக்கி விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!

ஈரான் நாட்டின் மலை மீது மோதி, விபத்துக்குள்ளான துருக்கி தனியார் விமானதில் பயணித்த 11 பேர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.35 மணியளவில இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் இருந்து, துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் விமானி உள்பட 11 பேருடன் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி பயணித்துள்ளது.

இந்நிலையில், விமானம் ஈரான் நாட்டின் சஹர்மகால் மாகாணத்திலுள்ள சஹர்-இ-கோர்ட் என்ற இடத்துக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ஒரு மலை மீது மோதி, தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு குழுவினர் 11 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY