ஈராக்: ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 7 பேர் பலி

ஈராக் நாட்டில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ. -17 ரக ராணுவ ஹெலிகாப்டர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது கட் மாகாணத்தின்

அருகே பறந்தபோது ஹெலிகாப்டர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு பைலட்கள் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY