ஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 210 ஆக உயர்வு காயம்-1700

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 210 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது 1700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்று நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈராக்- ஈரான் நிலநடுக்கத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY