இஸ்லாமியதேச பயங்கரவாதிகள்மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் பிரித்தானியா

i3.phpசிரியாவில், இஸ்லாமியதேச பயங்கரவாதிகள்மீது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார். இதற்கான அங்கீகாரத்தை தனது அமைச்சரவை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இன்று நடந்த வாக்கெடுப்பில், மேலதிகமாக 12 வாக்குகள், தாக்குதலுக்கு ஆதரவாகக் கிடைத்தன என்றும் கமெரூன் சொன்னார்.

இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்டநாடுகள் தாக்குதல் நடத்திவரும் அதேவேளை, பிரித்தானியா வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாத்திரமே எடுத்துவந்தது. இந்நியிலையிலே தாக்குதலை தீவிரப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘தனியே வான் தாக்குதல்களை மட்டும்தான் நடத்துவீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ‘இல்லை. சகல விதமான நடவடிக்கைகளிலும் இறங்குவோம். இராணுவ ஒத்துழைப்பு, புலனாய்வு ஒத்துழைப்பு, வளப்பரிமாற்றம்’ உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் பிரித்தானியா ஈடுபடும்’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளை விரைவில் ஒழித்துக்கட்டி, சிரியாவில் நல்லாட்சி ஒன்றினை நிறுவுவதே தமது நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY