இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு ஊழல் வழக்குகளில் தொடர்பு; குற்றவாளியாக சேர்க்க போலீசார் பரிந்துரை

நாட்டினுடைய அரசியலை சீர் குலைக்கும் நடவடிக்கையில் நீண்டகாலமாக விசாரணை நடத்தப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

மூத்த பிரதமர் மீது முறையான குற்றச்சாட்டுக்களைத் தொடங்க அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் முடிவு எடுத்து உள்ளது. இது குறித்து தீர்மானிக்க ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதன்யாகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார்.

இது குறித்து டெலிவிஷனில் பேசிய பிரதமர் நெதன்யாகு தனது அப்பாவித்தனத்தை அறிவித்து தொடர்ந்து பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தி செல்வேன் என உறுதியளித்தார். கடந்த ஒரு வருடமாக தான் 15 விசாரணை மற்றும் புலனாய்வுகளை சந்தித்து வருவதாக கூறினார்.

இரு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பெஞ்சமினை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அந்நாட்டு போலீசார் பரிந்துரைத்து உள்ளனர்.

LEAVE A REPLY