இவர்தான் விக்ரமின் வில்லன்

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தில், வில்லனாக நடித்திருக்கிறார் அபிஷேக்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அபிஷேக், இந்தப் படத்தில் விக்ரமிற்கு வில்லனாக நடித்துள்ளார்.

இவர், ‘பாபநாசம்’ படத்தில் கெளதமியின் மச்சானாக நடித்தவர். இந்தப் படத்தில் அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்துள்ளார் அபிஷேக்.

இவர்தான் வில்லன் என்பது இடைவேளைக்குப் பிறகுதான் தெரியவருமாம்.

LEAVE A REPLY