இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில், 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா சம்பளம்

இலங்கை – ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்படி, பராமரிப்பு தொடர்பான பணியாளர்கள் 100 பேருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் இதற்காக ஒருவருக்கான மாத சம்பளம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்ற 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY