இலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த சுயசரிதை புத்தகத்தை பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவரது வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரிக்கப்பட்டு, சீன வாசகர்களுக்கு வழங்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இந்நிலையில், இந்த புத்தகத்தை தமது புத்தக நிலையங்கள் மற்றும் நூலகங்கள் வாயிலாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக சீன வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

சம்பத் பண்டார என்பவரால் எழுதப்பட்ட பிரதமரின் வாழ்க்கை வரலாறு, பேராசிரியர் சங் யூ மற்றும் யின் ஜின்ஷன் ஆகியோரால் சீன மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.