இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு மாலைதீவு அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு மாலைதீவு அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் ஆவணங்களை பரீட்சிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் மாலைத்தீவு பிரஜைகள் தமது வீசா மற்றும் கடவுச்சீட்டுக்களின் காலமுடிவுகள் குறித்து பரீட்சித்து கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது தமது கடவுச்சீட்டுக்களையும், உரிய ஆவணங்களையும் எடுத்து செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.