இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தல்

கடந்த அரசாங்க காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பரிசீலனை செய்யுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 8 பிரிவினர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலுள்ள ஒரு சில குறைபாடுகளை சரி செய்யும் முகமாக திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

அதன்பின்னர் இந்த ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.