இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது்

லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தூதுரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

குறித்த சம்பவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்பொன்றைச் சார்ந்த மயூரன் சதானந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கின் முறைப்பாட்டாளராக பல்லிய குருகே மற்றும் வினோத் பி பிரியந்த பெரேரா ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கியே கழுத்தை அறுக்கப்போவதாக, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.